Published : 10 Jan 2020 07:31 AM
Last Updated : 10 Jan 2020 07:31 AM

அரணாக நாங்கள் இருப்போம்; வதந்திகளை நம்பி சிறுபான்மையினர் அச்சப்பட வேண்டாம்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி

திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி களை கண்டு சிறுபான்மையின மக்கள் அச்சப்பட வேண்டாம். அரணாக நாங்கள் இருப்போம் என்று சட்டப்பேரவையில் முதல் வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டத் தொடர் கடந்த 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.

இதன்தொடர்ச்சியாக, சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி நேற்று பேசியதாவது:

குடிமராமத்து திட்டத்தின்கீழ் தமிழகத்தில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப் படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறுபாசன ஏரிகள், குளங்கள் போன்ற 34 ஆயிரத்து 871 நீர்நிலை கள் 2017-ம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.2 ஆயிரத்து 182 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் சரியான நேரத் தில் செய்து கொடுத்ததால், கடந்த ஆண்டு இதே நாளில் 85 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கராக இருந்த வேளாண் பயிர் சாகுபடி பரப்பு, இந்த ஆண்டில் 97 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கராக உயர்ந் துள்ளது.

முதலீடுகள் ஈர்ப்பு

இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் விரைவில் அமைக்கப்படும். வெளிநாட்டு பயணங்களின் மூலம் ரூ.8,835 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் செய்யப் பட்ட ஒப்பந்தங்களில் 5 நிறுவனங் கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் அன்னிய முதலீடு கடந்த ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 3 ஆண்டுகளில் ரூ.1 லட் சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப் பட்டுள்ளதன் மூலம் கூடுதலாக 900 பேர் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள் தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெற நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல் வேறு காலகட்டங்களில் மருத் துவர்களால் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும்.

ஏழைப்பெண்களின் திருமணத் துக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இதுவரை ரூ.726 கோடியே 32 லட்சத்தில் 838.36 கிலோ தங்கம், 1 லட்சத்து 4 ஆயிரத்து 795 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 லட்சம் முதி யோருக்கு ஓய்வூதியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டு 1 லட்சத்து 54 ஆயிரத்து 888 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 3 ஆண்டுகளில் 110 விதி யின் கீழ் சட்டப்பேரவையில் வெளி யிடப்பட்ட 453 அறிவிப்புகளில் 419 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 118 அறிவிப்புகளுக்கான திட்டங் கள் முழுமையாக நிறைவேற் றப்பட்டுள்ளன. 301 அறிவிப்பு களுக்கான திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறுபான்மை யினருக்கு அரணாக அதிமுக அரசு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த அரசு சிறு பான்மையின மக்களை தொடர்ந்து பாதுகாக்கும் என உறுதி யளிக்கிறேன். அரசியல் உள்நோக் கத்துடன் உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் ஐயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என திடமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து சிறுபான்மையினருக்கு அரணாக அதிமுக அரசு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த அரசு சிறுபான்மையின மக்களை தொடர்ந்து பாதுகாக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x