Published : 10 Jan 2020 06:44 AM
Last Updated : 10 Jan 2020 06:44 AM

நியாயவிலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு விநியோகம்; ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: காலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பெற்றுச் சென்றனர்

சென்னை

தமிழகத்தில் நியாயவிலைக் கடை களில், அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நேற்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை மற்றும் கரும்பு துண்டு ஆகியவற்றுடன் ரூ.1000 பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு வழங்கப் பட்டது. இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுப்படி சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு முடிவெடுத்தது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கடந்த நவ.26-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புதிய மாவட்டத் தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இத்திட் டத்தை செயல்படுத்த ரூ.2 ஆயிரத்து 363 கோடியே 13 லட்சம் நிதியை ஒதுக்கி நவ.29-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட் டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கிடையே உள்ளாட் சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜன.9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அனைத்து, அதாவது 1 கோடியே 98 லட்சத் துக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும், விடுபட்டவர்களுக்கு ஜன.13-ம் தேதி வழங்கப்படும் என்றும் உணவுத் துறை அறிவித் தது. மேலும், நியாய விலைக் கடை களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற் றுடன் 500 ரூபாய் நோட்டுகளாக ரொக்கப் பணமும் அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து, ரூ.1000 ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நியாய விலைக்கடைகளில் நேற்று தொடங்கியது. ஒரே நேரத்தில் மக்கள் குவிவதைத் தவிர்க்க, கடை களில் உள்ள குடும்ப அட்டை களுக்கு ஏற்ப, தெருவாரியாகவும், எண்ணிக்கை அடிப்படையிலும் அறிவிப்பு செய்யப்பட்டு பொருட் கள் வழங்கப்பட்டன. பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது.

அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பரிசுத் தொகுப்பு வழங் கப்படும். விடுபட்டவர்களுக்கு திங்கள்கிழமை (ஜன.13) வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x