

கோவையில் பெண்கள் உடை மாற்றும் வீடியோ பரவிய விவகாரம் தொடர்பாக, தொலைக்காட்சி செய்தியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர காவல் துறை நிர்வாகத்தினர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது: மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபா காலனியில் ரூட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில், ரத்தினபு ரியைச் சேர்ந்த மணிகண்டன் (32), ஊழியராக பணியாற்றி வந்தார். அதே பங்க்கில் சுபாஷ் (32) என்பவ ரும் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், அந்த பெட்ரோல் பங்க்கில் உடைமாற்றும் அறையில், சுபாஷ் தன் செல்போனை மறைத்து வைத்து ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
அதை கண்டறிந்த மணிகண்டன், சுபாஷிடம் இருந்த செல்போனை பிடித்து அதில் பதிவாகியுள்ள காட்சிகளை அழித்துவிட்டு செல்போனை உடைத்துள்ளார். இது தொடர்பாக அந்த சமயத்தில் யாரும் புகார் தரவில்லை. இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்னர் சுபாஷ் செல்போனில் எடுக்கப்பட்ட பெண் கள் உடை மாற்றும் வீடியோக்கள் ஊடகங்களில் பரவின. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், 353(c) ipc, 66(e), 67(a) தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பெண்கள் வன் கொடுமை தடுப்புச்சட்டம் 2002, 3,4, 6 பெண்களுக்கு எதிராக ஒழுங்கீனமாக செயல்படுதல் சட்டப்பிரிவு 1986 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கப் பட்டது. காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பாலாஜி சரவணன் மேற்பார் வையில், உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமை யில், ஆய்வாளர் சந்திரலேகா மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் வீடியோவை திருட்டுத் தனமாக சுபாஷ் செல்போனில் இருந்து பரிமாற்றம் செய்து, தொலைக்காட்சி செய்தியாளர் மருதாச்சலத்துக்கு வழங்கி, அதை ஊடகங்களில் வெளியிட்டதும், இதற்கு மணிகண்டன் காரணமாக இருந்ததும் தெரிந்தது. இதைய டுத்து மணிகண்டன், சுபாஷ், மருதாச்சலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.