சென்னை மாநகராட்சியில் 78 தீர்மானங்கள்: முக்கிய சாலைகளில் கார்களுக்கு தடை, ஞாயிறுதோறும் சில மணி நேரம் அமல்

சென்னை மாநகராட்சியில் 78 தீர்மானங்கள்: முக்கிய சாலைகளில் கார்களுக்கு தடை, ஞாயிறுதோறும் சில மணி நேரம் அமல்
Updated on
1 min read

சென்னையின் முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரிசலை குறைத்து பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு வசதி செய்துதரும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கார் களுக்கு சில மணி நேரம் தடை விதிக்கப்படும் என மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

கார்கள் இல்லா சாலை

மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், சென்னையில் ஒருசில முக்கிய சாலைகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு கார்களுக்கு தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்திட்டம் இந்தியாவில் முதல்முறையாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் அமல்படுத்தப்பட்டது. கோவை மாநகராட்சியில் வரும் 9-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சாலைகள் பெயர் மாற்றம்

கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலைக்கு ‘தமிழ் சாலை’ என்றும், அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலைக்கு ‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன்பேட்டையின் பெயரை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுடன் ஆலோசித்த பிறகு, பெயர் முடிவு செய்யப்படும்.

காசநோயாளிகளுக்கு ரூ.1,000

சென்னை மாநகராட்சியில் காசநோய் திட்டத்தின்படி கண்டறியப்படும் எம்டிஆர், எக்ஸ்டிஆர் காசநோயாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தப்படும். சென்னையில் தற்போது 203 காசநோயாளிகள் உள்ளனர். மேலும் ஓராண்டுக்கு 100 நோயாளி கள் கண்டறியப்பட வாய்ப்பு உள்ளது. இவர்களுக்காக ரூ.36.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவைதவிர, இணையதள சொத்து வரி சுய மதிப்பீடு, 7 புதிய பூங்காக்கள் அமைப்பது, கூவம் ஆற்றங்கரையோரம் நடைபாதை அமைப்பது, வாகன நிறுத்தங்களுக்கு புதிய இடங்கள் தேர்வு செய்வது என்பது உட்பட 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மழலையர் வகுப்பில் 9,000 பேர்

‘இந்த கல்வி ஆண்டில் புதிதாக 100 மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 165 பள்ளிகளில் இந்த மழலையர் வகுப்புகள் உள்ளன.

கடந்த கல்வி ஆண்டில் மழலையர் பள்ளியில் 5,422 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலை குறைத்து பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in