

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வ ரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சீன அரசு தங்களது ‘யென்’ (ரூபாய்) மதிப்பை 2 சதவீதம் குறைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது இந்தியா வின் ஏற்றுமதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய் யப்பட்டுள்ள சதியாகும். இந்தியாவு டன் நட்பாக இருப்பதுபோல சீனா காட்டிக் கொண்டாலும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிக்கும் வகையிலான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
டெல்லியில் புதிய அரசு பொறுப் பேற்று ஓராண்டு கடந்துவிட்ட போதிலும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவான ஏற்றுமதி கொள்கை அறிவிக்கப்படவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் வரும் பாதிப்பு களை மத்திய வர்த்தக அமைச்சர் உள்ளிட்டோரிடம் எடுத்துச் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜவுளித் துறை அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நூற்பாலை மற்றும் விசைத்தறி தொழில்களில் தாங்க முடியாத அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், ஏற்றுமதிக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு மவுனமாக இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.