Published : 09 Jan 2020 06:46 AM
Last Updated : 09 Jan 2020 06:46 AM

ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: ஸ்ரீரங்கத்துக்கு 12 நாட்களில் 7.75 லட்சம் பக்தர்கள் வருகை

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை யொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு கடந்த 12 நாட்களில் ஏறத்தாழ 7.75 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலில் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் நடைபெறும் உற்சவங்களில் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற் சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

இந்த விழா இந்த ஆண்டு டிச.26-ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, டிச.27-ம் தேதி தொடங் கிய பகல் பத்து திருநாள் ஜன.5-ம் தேதி வரை நடைபெற்றது. முக் கிய திருநாளான சொர்க்க வாசல் திறப்பு விழா ஜன.6-ம் தேதி அதி காலை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ராப்பத்து திருநாள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராப்பத்து திருநாட்களில் நடை பெறும் நிகழ்வுகளில் ஜன.12-ம் தேதி திருக்கைத்தல சேவை, 13-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 15-ம் தேதி தீர்த்தவாரி, 16-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை முக்கியமானவை.

இந்த விழாக் காலங்களில் தமி ழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட்டுச் செல்கின்றனர்.

அந்த வகையில், இந்த முறை வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை யொட்டி கடந்த டிச.27 முதல் ஜன.5-ம் தேதி வரையிலான 10 நாட்களில் ஏறத்தாழ 5.50 லட்சம் பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்துள்ளனர். சொர்க்க வாசல் திறப்பு நடை பெற்ற ஜன.6-ம் தேதி மட்டும் ஏறத்தாழ 1.50 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். ஜன.7-ம் தேதி ஏறத்தாழ 75 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் ராப்பத்து திருநாட்களில் தின மும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நண் பகல் 12 மணிக்குப் புறப்பட்டு பகல் 1 மணிக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். நம்பெருமாள் புறப் பாட்டுக்குப் பின் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக் கப்பட்டு வருகின்றனர்.

கோயிலில் மூலவர் ரங்க நாதர் முத்தங்கி சேவையில் காட்சி யளித்து வருவதால், அதை தரி சனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் ஒருங் கிணைப்பில் அனைத்துத் துறை களும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவை கள் உள்ளிட்ட அனைத்து வசதி களையும் செய்துள்ளன.

வைகுண்ட ஏகாதசி பெரு விழா நிறைவடையும் வரை, மேலும் 5 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என கோயில் வட்டாரங் கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x