முதுகுளத்தூர் 8-வது வார்டு திமுக கவுன்சிலர் எங்கே?- நாளைக்குள் ஆஜர்படுத்துக: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

முதுகுளத்தூர் 8-வது வார்டு திமுக கவுன்சிலர் எங்கே?- நாளைக்குள் ஆஜர்படுத்துக: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Published on

கடத்தப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள முதுகுளத்தூர் 8-வது வார்டு திமுக கவுன்சிலர் சாத்தையாவை நாளைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்ட முதுகுளத்தூரைச் சேர்ந்த சாத்தையா திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலரானார்.
ஆனால், பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் அவரை அதிமுகவினர் கடத்திச் சென்றதாக அவரது மகன் ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாத்தையா சட்டவிரோத காவலில் இல்லை எனத் தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள் அவர் சட்டவிரோத காவலில் இல்லையென்றால் நாளைக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர். அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தினர். வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in