8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசி கன் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

(அதிகாரிகள் முன்பு வகித்த பொறுப்பு அடைப்புக்குறிக்குள்) டாக்டர் கே.மகரபூஷணம் – பேரூராட்சிகள் இயக்குநர் (சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர்).

எம்.சந்திரசேகரன் – பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை ஆணையர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முன்னாள் நிர்வாக இயக்குநர்).

டாக்டர் ராஜேந்திர குமார் - தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வர்த்தக துறை இயக்குநர்.

ராஜேந்திர ரத்னூ – பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் (பேரூராட்சிகள் இயக்குநர்).

கிரண் குர்ராலா – தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் இயக்குநர்).

கக்கர்லா உஷா – தமிழ்நாடு நகர்புற கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்.

சி.மனோகரன் – தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர்.

மங்கத்ராம் சர்மா – தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் (டெடா) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in