Published : 08 Jan 2020 09:03 AM
Last Updated : 08 Jan 2020 09:03 AM

குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர் ஒருவருக்குகூட பாதிப்பு வராது: சென்னையில் நடந்த பாஜக பேரணியில் இல.கணேசன் உறுதி

குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர் ஒருவருக்குக்கூட பாதிப்பு இருக்காது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதர வாக பாஜக சார்பில் சென்னை புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சந்திப்பில் தொடங்கி எழும்பூர் ரமடா ஹோட்டல் வரை நேற்று மாலை பேரணி நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திரு வண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாஜக வினர் பங்கேற்று குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக முழக் கங்களை எழுப்பினர்.

பாஜக தேசிய துணைத் தலை வர் ஜெய் பாண்டா, மூத்த தலை வர் இல.கணேசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாய கன், மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்று பேசினார்கள்.

பேரணியின் நிறைவில் இல.கணேசன் பேசியதாவது:

இந்தியாவில் இருந்து மதத்தின் அடிப்படையில் பிரிந்து சென்ற பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடு களில் மத வன்முறைக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைந் துள்ள இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, சமண, பார்சி ஆகிய சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கவே குடியுரி மைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை 95 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் முஸ்லிம் நாடுகள். இந்த 3 நாடு களிலும் முஸ்லிம்கள் மத வன் முறைக்கு ஆளாக வாய்ப்பில்லை. எனவேதான் குடியுரிமைச் சட்டத் தில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட வில்லை.

இந்தச் சட்டத்தில் இந்தியர்கள் ஒருவருக்குக்கூட பாதிப்பு இருக் காது. ஒரு இந்திய முஸ்லிம்கூட நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார். இதை பிரதமர் மோடி யும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்தி விட்டனர். ஆனாலும், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி களும், அடிப்படைவாத அமைப்பு களும் குடியுரிமைச் சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.

பாஜக, அனைத்து இந்தியர் களுக்குமான கட்சி. பாஜகவில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கை யில் இருக்கிறார்கள். முக்கியப் பொறுப்புகளிலும் உள்ளனர். மத்திய அமைச்சரவையிலும் உள் ளனர். இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காகவே நாடு முழுவ தும் ஒருவார காலத்துக்கு பேரணி, பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு என்று பிரச்சார இயக்கத்தை பாஜக நடத்தி வருகிறது.

இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x