

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜன.15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் - சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர் கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், 30 நாட்கள் ஊதியத்துக்கு இணை யான தொகை ரூ.3,000, தற்காலிக மிகை ஊதியம் அதாவது போன ஸாக வழங்கப்படுகிறது.
மேலும், 2018-19 ஆண்டுக் கணக்கில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப் பூதியதாரர்கள், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் குறிப்பாக அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
கிராம நூலகர்கள்
குரூப் - சி மற்றும் டி பிரிவு ஊழியர்ளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர் கள், சத்துணவு சமையலர்கள், கிராம நூலகர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு உதவி யாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், காவல் நிலைய துப் புரவாளர்கள் உள்ளிட்டவர்களுக் கும் அனைத்து குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கும் ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக ரூ.500 வழங் கப்படும். இந்த உத்தரவு தற்காலிக ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.