புதிய வடிவம் பெறும் பாம்பன் ரயில் பாலம்

புதிய வடிவம் பெறும் பாம்பன் ரயில் பாலம்
Updated on
1 min read

பாம்பன் ரயில் தூக்குப்பாலம் விரைவில் புதிய வடிவில் அமைய உள்ளது.

ராமேசுவரம் தீவை பிரதான நிலப்பகுதியோடு பாம்பன் ரயில் பாலம் இணைக்கிறது. ஆங்கிலேய பொறியாளர் ஸ்கெர்சர் இந்தப் பாலத்தை கட்டினார். 1914-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாலம் தான், இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 2.3 கி.மீ. நீளம் கொண்டது. கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. பாலத்தின் மத்திய பகுதியில் தூக்குப்பாலம் அமைந்துள்ளது.

101 ஆண்டுகளுக்கும் மேல் கடலில் நிலைகொண்டுள்ள இப்பாலத்தில், சேதமடைந்த 28 கர்டர்களை அகற்றிவிட்டு புதிதாக கர்டர்கள் பொருத்தும் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

2-ம் கட்டமாக, 60 பழைய கர்டர்களை அகற்றிவிட்டு, ரூ.3 கோடியில் புதிய கர்டர்கள் பொருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. தற்போது மனித ஆற்றலால் இயங்கி வரும் தூக்குப் பாலம், புதிதாக அமைக்கப்படும்போது, இயந்திர முறையில் இயங்கக் கூடியதாக வடிவமைக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in