

மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீஸார் அடக்குமுறை செய்வதாக ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாநிலச் செயலாளர் ரா.வேல் முருகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மது வேண்டாம் என்று போராடும் வாலிபர் சங்கத்தினரை போலீஸார் தாக்கி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் வாலிபர் சங்கத்தை சேர்ந்த 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 6 ஊழியர்கள் மீதும் ஈரோட்டில் ஒருவர் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல், ஆகஸ்ட் 10-ம் தேதி 200 மையங்களில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.