கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மதுரையில் கராத்தே தியாகராஜன் நம்பிக்கை

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மதுரையில் கராத்தே தியாகராஜன் நம்பிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ஏழை ,எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை, மாணவ-மாணவியர்க்கு இலவச கல்வி உபகரணங்கள், ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் விழா மதுரை செல்லூரில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் சென்னை மாநகர முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், மதுரை மாநகர், புறநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் ரபீக், இளங்கோமணி, அழகர், பால்பாண்டி, முத்துப்பாண்டி ஒய்வு பெற்ற காவல்துறை ஏடிஎஸ்பி குமரவேல், பால.தம்புராஜ், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்.

ரஜினிகாந்த் மே, ஜூன் மாதம் கட்சி தொடங்குவது உறுதி. அவர் தமிழக முதல்வராவார். மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு நிறைவேறாது.

ரஜினி பற்றி அதிமுக அமைச்சர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் விமர்சனம் செய்தால் பார்த்துக்கொள்ளலாம்"

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in