அன்று துப்புரவு பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்: பதவியேற்றுக் கொண்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் சரஸ்வதி

அன்று துப்புரவு பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்: பதவியேற்றுக் கொண்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் சரஸ்வதி
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய சரஸ்வதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்று இன்று (திங்கள்கிழமை) பஞ்சாயத்து தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் அரசு ஊழியராக துப்புரவு பணி செய்து வந்துள்ளார் சரஸ்வதி.
இவர் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார். இதற்காகவே, தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இதனால் தனது அரசு வேலையை பறிகொடுத்து ஏமாற்றத்தில்இதனால் தனது அரசு வேலையை பறிகொடுத்து ஏமாற்றத்தில் இருந்த சரஸ்வதி பஞ்சாயத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இருந்தபோதும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது ஆர்வத்தை குறைக்காமல் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்ட நிலையில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி 1113 வாக்குகள் வாங்கி 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

வெற்றி பெற்ற சரஸ்வதி தான் மக்களுக்கு நல்லது செய்வேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று காலை ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in