

ஆழ்கடலில் வெளிநாட்டு இயந்திரப் படகுகள் மீன்பிடிக்க வகைசெய்யும் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது. அதன் விவரம்:
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் 15 முதல் 20 மீட்டர் நீளமுள்ள படகுகள் அனைத்தும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு புதிதாக கொண்டு வந் துள்ள விதிமுறைகள் சட்டவிரோத மானதாகும். தமிழகத்தில், ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக் கும் விசைப்படகுகள் 5,500 உள்ளன. இதில் 80 சதவீத மீன்பிடி படகுகள் 15 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ளன. இதனால் ஆழ் கடலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது இயலாத காரியம். எனவே, இப் புதிய விதிமுறையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் புதிய விதிமுறை கள் வெளிநாட்டு இயந்திரப் படகு கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கவே வழிவகுக்கும் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.