

பாமக முதல்வர் வேட்பாளர் அறிவித்திருப்பது கூட்டணி தர்மத்துக்கு ஏற்புடையதல்ல என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட் டியில் கூறியதாவது:
முதல்வர் வேட்பாளரை பாமக தாமாகவே அறிவித்திருப்பது கூட்டணி தர்மத்துக்கு ஏற்புடையதல்ல. விஜயகாந்தும் எந்தக் கூட்டணியிலும் இல்லை என அறிவித்திருக்கிறார். எனவே கூட்டணி வேண்டுமா, வேண்டாமா, யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைமைதான் வெளியிடும்.
லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வு மையத்தின் கருத்து கணிப்பு, கருத்து திணிப்பாக உள்ளது. திமுகவுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு நடந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி 22 சதவீதம், மு.க.ஸ்டாலின் 28 சதவீதம் என்றால், இருவரும் சேர்ந்து 50 சதவீத வாக்குகளை வாங்கி விடுவார்களா? நான் புள்ளியியல் மாணவன். இக் கருத்துக்கணிப்பு விஞ்ஞானப் பூர்வமாக நடத்தப்பட்டதாக எனக்கு தெரியவில்லை.
திமுகவில் 2 பெயர் உள்ளது போல், அதிமுகவில் ஏன் பன்னீர் செல்வத்தை கருத்துக் கணிப்பில் சேர்க்கவில்லை? 2 முறை முதல்வராக அவர் இருந்துள்ளதால் அவரது செயல்பாட்டையும் மக்கள் பார்த்துள்ளனர். எனவே அவரையும் கருத்துக்கணிப்பில் சேர்த்திருக்கலாம்.
தமிழகத்தில் 5 கட்சிகள் இணைந்துள்ள மக்கள் நலக் கூட்டணி, திமுகவுடன் பேரம் பேசுவதற்காக உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.
பொது சிவில் சட்டம்
மத ரீதியான கணக்கெடுப்பில் இந்துக்கள் வளர்ச்சி எதிர்மறையா கவும், முஸ்லிம்கள் வளர்ச்சி நேர் மறையாகவும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் 2115-ல் இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள். இந்த முடிவுகள் பெரும்பான்மை சமூகத்திடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் இந்து மக்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு என சிவசேனா அறிவித்திருப்பது அக்கட்சித் தலைமையின் உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. ஜனத்தொகை விகிதாச் சாரத்தை நிலைப்படுத்த வேண்டும், பொது சிவில் சட்டம், மதமாற்றத் தடை சட்டம், கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மத ரீதியான கருத்துக்கணிப்பு முடிவைப்போல, சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வெளியிட முடியாது. அதில் பல்வேறு தவறுகள் உள் ளன. எனவே 2 கருத்துக் கணிப்பு களையும் தொடர்புபடுத்தி உள் நோக்கம் கற்பிக்கக்கூடாது.
இவ்வாறு எச்.ராஜா கூறி னார்.