Published : 05 Jan 2020 04:07 PM
Last Updated : 05 Jan 2020 04:07 PM

திமுக இளைஞரணி நடத்தும் ‘டிசிஎல்’ கிரிக்கெட் போட்டி: தமிழகம் முழுதும் அணிகள் பங்கேற்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிபோல் இளைஞர்களை திரட்டும் டிபிஎல் கிரிக்கெட் போட்டியை திமுக இளைஞரணி நடத்த உள்ளது. இதன் இறுதிப்போட்டி சென்னையில் நடக்கிறது. ஸ்டாலின் வெற்றிப்பெற்ற அணிக்கு பரிசு வழங்குகிறார்.

தமிழகத்தில் கிரிக்கெட் போட்டிகள் மீது இளைஞர்களுக்கு தனி மவுசு உண்டு. இந்திய அளவில் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் வரவேற்பை அடுத்து தனியார்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் போட்டியான இதன்மூலம் பல திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர்.

இதேப்போன்று தமிழக அளவில் டிபிஎல் போட்டிகளும் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வாகின்றனர். கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு தனி என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். பல இளைஞர்கள் இணைந்து கிரிக்கெட் குழுக்கள் அமைத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

திமுக இளைஞரணி இதேப்போன்று தமிழகம் முழுதும் இளைஞர்களை திரட்டும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவர் கிரிக்கெட் லீக்’ நடத்த உள்ளனர். நேற்று திமுக இளைஞரணி நடந்த திமுக மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒரு தீர்மானம் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞரணியின் சார்பில், ‘தலைவர் பிறந்தநாள் தங்கக்கோப்பை கிரிக்கெட் போட்டி’ ‘டிசிஎல்’ நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் திமுக மாவட்ட அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள 65 மாவட்டங்களில் போட்டிகளை நடத்துவது என்றும், அதில் தேர்வாகும் அணிகளை தமிழகம் முழுதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தி அதில் பைனலுக்கு வரும் அணிகளை வைத்து சென்னையில் இறுதிப்போட்டி நடக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இறுதிப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப்பிடிக்கும் அணிகளுக்கு கோப்பையுடன் ரொக்கப்பரிசையும் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கவுள்ளார். முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2-வது பரிசாக ரூ.3 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும் பரிசளிக்கப்படுகிறது.

10 ஓவர்கள் கொண்ட டென்னீஸ் பந்து மேட்சாக இது நடப்பதால் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட மாநில அளவில் யார் வேண்டுமானாலும் அணிகளை பதிவு செய்து போட்டியில் கலந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் யாரிடம் பதிவு செய்வது உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இரண்டாவது தீர்ம்னானமாக அவதூறுகளை அடித்து நொறுக்க தொடங்கப்பட்டுள்ள ‘பொய் பெட்டி’ நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொய், அவதூறு, கட்டுக்கதைகளை பிரபலங்கள் ஆதாரத்துடன் முறியடிக்கும் நிகழ்ச்சி இது.

அடுத்து இந்தியாவில் அறங்கேறிவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்துநிறுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அண்ணா பல்கலையை இரண்டாகப் பிரிக்கக்கூடாது, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையும் கைவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x