

சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒடுகம் பட்டியைச் சேர்ந்தவர் கே.விஜயகுமார்(36).
இவர், திருமணம் செய்துகொள்வதாகக் கூறிகடந்த 2018-ல் ஒரு சிறுமியுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், விஜயகுமாரை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.
ரூ.7 லட்சம் இழப்பீடு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டார்.