

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி, அனைத்து முதன்மை அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி உடல்திறனை வளர்க்கும் விதமாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.
இதற்கான செலவினத் தொகை ஒருங்கிணைந்த கல்வி மானியத்தில் இருந்து பயன்படுத்திக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.