யார் வெற்றி பெற்றது?- காரைக்குடியை கலங்கடிக்கும் ஊராட்சி மன்ற பதவிக்கான போஸ்டர்- குழப்பத்தில் பொதுமக்கள்

யார் வெற்றி பெற்றது?- காரைக்குடியை கலங்கடிக்கும் ஊராட்சி மன்ற பதவிக்கான போஸ்டர்- குழப்பத்தில் பொதுமக்கள்

Published on

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேவி மாங்குடி என்பவரும் பிரியதர்ஷினி ஐயப்பன் என்பவரும் வேட்பாளராக போட்டியிட்டனர். இருவருக்கும் பலத்த போட்டி இருந்தது .

கடந்த 2 தேதியன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து வெற்றி சான்றிதழ் வழங்கினார் ஆனால் அதை ஏற்க மறுத்த வேட்பாளர் பிரியதர்ஷினி மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கை வைத்தார் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தேவி மாங்குடி வெற்றி ரத்து செய்யப்படுவதாகவும் மறு வாக்கு நடத்தப்படும் என அதிகாலை அறிவிக்கப்பட்டு தேவி மாங்குடி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இன்றி மறு வாக்கு நடந்தது இதில் பிரியதர்ஷினி அய்யப்பன் 63 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஒலிபெருக்கியில் தேவி மாங்குடி தோல்வி அடைந்ததாகவும் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி அடைந்ததாகவும் அறிவித்தனர் ஆனால் தேவி மாங்குடி அவருக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழுடனும் மற்றும் பிரியதர்ஷினி ஐயப்பன் ஆகிய இருவரும் தாங்கள் வெற்றி பெற்றதாக காரைக்குடி ,சங்கராபுரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் யார் வெற்றி பெற்றோர்கள் என்று குழப்பத்தில் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in