Last Updated : 04 Jan, 2020 11:48 AM

 

Published : 04 Jan 2020 11:48 AM
Last Updated : 04 Jan 2020 11:48 AM

உள்ளாட்சி தேர்தல் சுவாரஸ்யம்: அதிமுக எம்எல்ஏ மனைவியை தோற்கடித்த திமுக பேச்சாளரின் தாயார்

சிவகங்கை மாவட்டம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏவின் மனைவியை திமுக பேச்சாளரின் தாயார் தோற்கடித்தார்.

மானமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர் நாகராஜன். இவரது சொந்த ஊரான இளையான்குடி ஒன்றியம் கீழநெட்டூரில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தனது மனைவி சிவசங்கரியை களமிறக்கினார்.
இவரை எதிர்த்து திமுக தலைமைக் கழகப் பேச்சாளரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான அய்யாச்சாமி தனது தாயார் வீராயியை நிறுத்தினார்.

கட்சி சின்னம் ஒதுக்காத பதவியாக இருந்தபோதிலும் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி இருந்தது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் நடந்தது. முடிவில் வீராயி 611 வாக்குகளும், சிவசங்கரி 560 வாக்குகளும் பெற்றனர். இதனால் 51 வாக்குகள் வித்யாசத்தில் வீராயி வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கையில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி எம்எல்ஏ தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தினர்.
ஆனால், அதற்கு தேர்தல் அதிகாரிகள் மறுத் துவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு வெற் றிபெற்றதற்கான சான்றிதழை வீராயிக்கு தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x