

இலங்கையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த ஐயப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலை பயணக்கின்றனர்.
இவர்கள் வருடம் தோறும் தவறாமல் ஐயப்பனை தரிசிக்க இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் கேரளாவை நோக்கிப் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை வந்த குழுவில் 60-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இது குறித்து பக்தர் ஒருவர், கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து மகர ஜோதி தரிசனம் காணும் வரைவிரதம் கடைபிடிக்கிறோம்.
இந்தியாவில் முதலில் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பல புனித ஸ்தலங்களுக்கு செல்ல இருக்கிறோம். நடராஜ குருக்கள் தலைமையில் 23-வது வருடமாக மகர ஜோதியைக் காண செல்கிறோம்" என்றார்.
இந்தப் பயணத்தில் குழந்தைகள், பென்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளனர். ஐயப்ப தரிசனத்துக்குப் பின்னர் தமிழகம், கேரளாவில் உள்ள பல புனித தலங்களுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்புகின்றனர்.