Published : 04 Jan 2020 07:57 AM
Last Updated : 04 Jan 2020 07:57 AM

திருப்பூர் மாவட்ட கவுன்சிலர் பதவி: அதிமுக 13 இடங்களில் வெற்றி; திமுக கூட்டணிக்கு 4- தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 6-ம் தேதி பதவி ஏற்பு

திருப்பூர்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திருப் பூர் மாவட்டத்திலுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் அதிமுக 13 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றன. கடந்த முறை 17 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை திமுக கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்களும், வாக்குகளும்: அவிநாசி 1- வது வார்டில் அதிமுக வேட்பாளர் சீதாலட்சுமி 24209, 2-வது வார்டில் சிவகாமி 20065 வாக்குகள் பெற்றனர். திருப்பூர் 3-வது வார்டு அதிமுக வேட்பாளர் சாமிநாதன் 18178 வாக்குகளும், ஊத்துக்குளி 4-வது வார்டு அதிமுக வேட்பாளர் கண்ணம்மாள் 19288 வாக்குகளும், 5-வது வார்டு அதிமுகவின் சக்திவேல் 21151 வாக்குகளும், பொங்கலூர் 6-வது வார்டு அதிமுக வேட்பாளர் பழனிச் சாமி 21974 வாக்குகளும் பெற்றனர்.

பல்லடம் 7-வது வார்டு திமுக சின்னத்தில் போட்டியிட்ட (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ராஜேந்திரன் 18547 வாக்குகளும், 8-வது வார்டில் அதிமுகவின் ஜெயந்தி 18652 வாக்குகளும், குண்டடம் 9-வது வார்டில் அதிமுகவின் சிவபாலகிருஷ்ணன் 21196 வாக்குகளும், காங்கயம் 10-வது வார்டில் அதிமுகவின் கற்பகம் ஜெகதீசன் 22290 வாக்கு களும், மூலனூர் 11-வது வார்டு அதிமுக வேட்பாளர் ரஞ்சிதம் 22551 வாக்குகளும், தாராபுரம் 1 2-வது வார்டு அதிமுக வேட்பாளர் பானுமதி 21252 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

குறைந்த, அதிக வாக்குகள் வித்தியாசம்: குடிமங்கலம் 13-வது வார்டில் அதிமுகவின் சத்தியபாமா 23342 வாக்குகளும், 14-வது வார் டில் அதிமுகவின் பாண்டியன் 19219 வாக்குகளும், மடத்துக்குளம் 15-வது வார்டில் திமுகவின் லதாபாண்டியன் 21993 வாக்கு களும், உடுமலைப்பேட்டை 16-வது வார்டில் திமுகவின் மலர்விழி 20741 வாக்குகளும் பெற்றனர்.

17-வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தனன் 17247 வாக்குகளும் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஜெகநாதன் 17181 வாக்குள் பெற்றார். வாக்கு வித்தி யாசம் 66. மாவட்டத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தனன் வெற்றி பெற்றார்.

அவிநாசி 1-வது வார்டில் போட்டி யிட்ட அதிமுகவின் ஆ.சீதாலட்சுமி, திமுக வேட்பாளர் லலிதாவைக் காட் டிலும் 8166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மாவட்ட கவுன்சிலராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆ.சீதாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. அவிநாசி, பல்லடம், உடுமலைப் பேட்டை, குடிமங்கலம், ஊத்துக் குளி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங் களில் தலா இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

11-ம் தேதி மறைமுகத் தேர்தல்

திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட கவுன்சிலர்கள், 170 ஒன்றிய கவுன்சிலர்கள், 265 ஊராட்சித் தலைவர்கள், 2292 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 2744 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர்கள் 11 பேரும், 490 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், வரும் 6-ம் தேதி பதவி ஏற்க உள்ள னர். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சித் தலைவர் முன்பும், ஊராட்சித் தலைவர்கள் தாமாகவே பதவி ஏற்றுக்கொள்ளலாம்.

அந்தந்த ஒன்றியங்களில் வயதில் மூத்த ஒன்றிய கவுன்சிலர் முதலில் தாமாகவே பொறுப்பு ஏற்பார்கள். மற்ற கவுன்சிலர்கள் இவர் முன்பாக பதவியேற்பார்கள். அதேபோல், மாவட்ட கவுன்சிலர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 6-ம் தேதி பதவி ஏற்பார்கள்.

இதைத்தொடர்ந்து, மறைமுகத் தேர்தல் வரும் 11-ம் தேதி காலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவல கத்தில் வைக்கப்பட்டிருந்த பயன் படுத்தாத வாக்குச்சீட்டுகள் அனைத் தும், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் நேற்று சேர்க்கப்பட்டன. இதேபோல், பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

முடிவுக்கு வரும் நடத்தை விதிகள்

தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, ‘ இன்று மாலையுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைவதால், மாவட்ட நிர்வாகத்தின் வழக்கமான பணிகள் நாளைமுதல் (ஜன.5) நடைபெறும்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x