கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகளை வென்றது அதிமுக: குமரி ஊராட்சி ஒன்றியங்களில் பாஜக சாதனை

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிகளை வென்றது அதிமுக: குமரி ஊராட்சி ஒன்றியங்களில் பாஜக சாதனை
Updated on
1 min read

கன்னியாகுமரி மற்றும் தூத்துக் குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றுகி றது. குமரி மாவட்ட ஊராட்சிய ஒன்றியங்களில் அதிக இடங்களை பாஜக வென்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவிகள் உள்ளன. 53 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. அதிமுக 4 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள் ளன. திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

பாஜக ஆதரவுடன் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. இது போல், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 வார்டுகளில் 12 இடங்களில் வென்று மாவட்ட ஊராட்சியை அதிமுக கைப்பற்றி உள்ளது. திமுக 5 இடங்களில் வென்றுள்ளது.

பாஜக சாதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 111 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. இவற்றில், குருந்தன்கோடு ஒன்றியம் 5-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுகந்தி, மேல்புறம் ஒன்றியம் 9-வது வார்டில் போட்டியிட்ட ராஜன் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால் அந்த 2 வார்டுகளிலும் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 109 வார்டுகளுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், அதிகபட்சமாக பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 24, திமுக 21, அதிமுக 16, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி தலா 1, சுயேச்சைகள் 9 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 3-ல் திமுகவும் 2-ல் அதிமுகவும் ஒரு ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. ராஜாக்க மங்கலம், தக்கலை, முன்சிறை ஆகிய ஒன்றியங்களில் பாஜக அதிக வார்டுகளைப் பெற்றுள்ளது. இங்கு அதிமுக ஆதரவளித்தால் தலைவர் பதவியை பாஜக கைப்பற்றும் நிலை உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 174 வார்டுகளில் திமுக கூட்டணி 74, அதிமுக கூட்டணி 68, அமமுக 13, புதிய தமிழகம் 1, சுயேச்சைகள் 18 இடங்களில் வென்றுள்ளனர். இங்கு மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றி யங்களின் தலைவர்கள் பதவிக்கு, அதிமுக 5, திமுக 4, அமமுக 1 ஒன்றியத்தை கைப்பற்றியுள்ளன. 2 ஒன்றியங்களில் இழுபறி நீடித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in