Published : 04 Jan 2020 06:09 AM
Last Updated : 04 Jan 2020 06:09 AM

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக: உள்ளாட்சித் தேர்தல் நிரூபித்துள்ளதாக ராமதாஸ் தகவல்

சென்னை

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக என்பதை உள்ளாட்சித் தேர்தல் நிரூபித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடை பெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் களின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிமுக தலைமை யிலான கூட்டணியில் பாமக போட்டி யிட்ட இடங்களில் கணிசமான அளவில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

52.09 சதவீத இடம்

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளைப் பொறுத்தவரை பாமக மொத்தம் 36 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களைப் பொறுத்தவரை போட்டியிட்ட இடங்களில் 52.09 சதவீத இடங்களை வென்றிருக்கிறது.

ஊராட்சி ஒன்றியங்களில் பிறகட்சிகளைவிட பாமகவின் வெற்றி சதவீதம்தான் அதிகம். மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்த வரை களமிறங்கிய இடங்களில் 44.44 சதவீத வெற்றி வாகை சூடியிருக்கிறோம். இது மிகப் பெரிய வெற்றி என்பதில் சந்தேக மில்லை.

இன்னும் சில இடங்களில் முடிவு கள் வெளிவர வேண்டியுள்ளன. அப்போது வெற்றி சதவீதம் உயரும். அதேபோல், கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேச்சை சின்னங்களின் அடிப் படையில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட ஆயிரக்கணக்கான இடங்களில் பாமகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.

சற்றே அதிகம்

இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாமகதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களைவிட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில்தான் அதிகமா கும்.

பாமகவின் வெற்றிக்காக உழைத்த அதிமுக தலைமையி லான கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகி களுக்கும், தொண்டர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல் களையும் தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x