

உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘குயின்’ இணையதளத் தொடருக்குத் தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு இருந்தபோது வெளியான ‘குயின்’ இணையதளத் தொடருக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை 'குயின்' தொடருக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மனு, விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.