Published : 03 Jan 2020 11:08 AM
Last Updated : 03 Jan 2020 11:08 AM

மதுரை மேலூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றிய திமுக

மதுரை மேற்கு ஒன்றியம் வாக்கு எண்ணிக்கை மையம் முன் திரண்டுள்ள வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்.

மதுரை மேலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிச.27, 30 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், மதுரை மேற்கு ஒன்றிய வாக்கு எண்ணிக்கை திருப்பாலை யாதவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

அதில் வாக்கு எண்ணிக்கையை காலை 8 மணி முதல் 10 மணி வரை, 10 மணி முதல் 12 மணி, மதியம் 12 முதல் 2 மணி வரை, மதியம் 3 முதல் 5 மணி வரை, மாலை 5 முதல் 7 மணி வரை ஆகிய 5 சுற்றுகளாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திட்டமிட்டபடி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் முதல் சுற்று முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரமே நேற்று (ஜன.2) பிற்பகல் 3 மணிக்கு தான் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதுவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட, 7-வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜுபாலா வெற்றிப் பெற்றுள்ளார். அதேபோல் 8-வது வார்டில் திமுக வேட்பாளர் நேருபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.

மேலூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் அள்ளிய திமுக:

அதேபோல் மேலூரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் திமுகவே அதிகளவில் கைப்பற்றியுள்ளது.

22 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வெற்றிப் பெற்றவர்களின் விபரம்:

* திமுக - 9
* அதிமுக- 8
* அமமுக - 3
* காங்கிரஸ் - 1
* சுயேட்சை - 1

வெற்றி பெற்றவர்களின் விவரம்:

1வது வார்டு - காங்கிரஸ் - மலைச்சாமி

2வது வார்டு - திமுக - சத்தியகலா

3வது வார்டு - திமுக - பாலகிருஷ்ணன்

4வது வார்டு - திமுக - பரமேஸ்வரி

5வது வார்டு - சுயேட்சை - வெங்கடேசன்

6வது வார்டு - திமுக - கெங்கையம்மாள்

7வது வார்டு - திமுக - விஜயலெட்சுமி

8வது வார்டு - திமுக - ராமசாமி

9வது வார்டு - திமுக - பெரியவர்

10வது வார்டு - திமுக - தமிழ்மாறன்

11வது வார்டு - அதிமுக - பொன்னுச்சாமி

12வது வார்டு - அமமுக - லீனா

13வது வார்டு - அதிமுக - சரோஜா

14வது வார்டு - அதிமுக - கௌரிமீனாட்சி

15வது வார்டு - அமமுக - அபிராமி ராமலிங்கம்

16வது வார்டு - அதிமுக - வினோதினி

17வது வார்டு - அதிமுக - பஞ்சவர்ணம்

18வது வார்டு - திமுக - முருகன்

19வது வார்டு - அதிமுக - பிரபு

20வது வார்டு - அதிமுக - கல்லாணை

21வது வார்டு - அமமுக - பானுமதி

22வது வார்டு - அதிமுக - சுமித்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x