விடிய விடிய வாக்கு எண்ணிக்கை: சாலை ஓரக் கடைகளி்ல் சாப்பிட்டு முடிவுக்காக வேட்பாளர்கள் காத்திருப்பு

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக சாப்பாட்டுக் கடை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக சாப்பாட்டுக் கடை
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில், வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நீடித்ததால், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நள்ளிரவில் சாலையோர கடைகளில் சாப்பிட்டு தேர்தல் முடிக்காக காத்திருந்தார்கள்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தொடங்கி (ஜன.2) இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாவட்டங்களில் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்றது. இன்று (ஜன.3) காலையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இங்கு 19 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கும், 57 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.

இவர்கள் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் மையத்தின் முகப்பில் விடிய விடிய காத்திருந்தனர். இதனால் சாலை ஓரத்தில் தற்காலிக டீ மற்றும் சாப்பாட்டுக் கடைகள் போடப்பட்டிருந்தன. வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் இந்த கடைகளில் அனைவரும் நின்றபடியே சாப்பிட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in