

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏவின் கணவர் தோல்வியடைந்தார்.
மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த பரமேஸ்வரி. இவரது கணவர் முருகன் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக-வின் தர் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், திமுக வேட்பாளர் தர் 2,511 வாக்குகளும், முருகன் 1,204 வாக்குகளும் பெற்றனர். 1,307 வாக்குகள் வித்தியாசத்தில் தர் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்திருந்த எம்எல்ஏ பரமேஸ்வரி மற்றும் முருகன் ஆகியோர் வெற்றி வாய்ப்பு குறைவதை அறிந்து உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் எம்எல்ஏ-வின் கணவர் தோல்வி அடைந்தது உள்ளூர் மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதரின் மனைவி தோல்வி
இந்நிலையில், மண்ணச்சநல் லூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்த லில் திமுக சார்பில் 1-வது வார்டில் போட்டிட்ட தரின் மனைவி கீதா தர், பாஜக வேட்பாளர் பரமேஸ்வரி குமாரிடம் தோல்வியடைந்தார்.
பரமேஸ்வரி குமார் 1,859 வாக்குகளும், கீதா 1,727 வாக்குகளும் பெற்றனர். இதன்படி, 132 வாக்குகள் வித்தியாசத்தில் கீதா தர் தோல்வியடைந்தார்.