சேலம் மாவட்டத்தில் திமுக வெற்றியை அறிவிப்பதில் தாமதம்: ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏ தர்ணா

சேலம் மாவட்டத்தில் திமுக வெற்றியை அறிவிப்பதில் தாமதம்: ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி., எம்எல்ஏ தர்ணா
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் திமுகவினரின் வெற்றியை அறிவிக்க பல மணி நேரம் தாமதம் செய்வதாக கூறி, சேலம் திமுக எம்.பி. பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவல கத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலத்தில் 20 ஊராட்சி ஒன்றியங் களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், வாக்குப்பெட்டிகளில் இருந்து 4 வகையான வாக்குச் சீட்டுகளை தனித்தனியாக பிரிப்பதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவே தொடங்கியது.

சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களில் பலருக்கு காலை உணவு வழங்குவதில் தாதமம் ஏற்பட்டதால், 30-க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்தனர். 1 மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் பணிக்கு திரும்பினர்.

இதேபோல, சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் 8-வது வார்டுக்கான ஒரு வாக்குப்பெட்டியை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரவில்லை. இதனால்,அந்த பெட்டி மாயமானதாக, திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், வேறு வார்டுக்கான வாக்குப் பெட்டியின் வாக்குகள் எண்ணத் தொடங்கியதில், 8-வது வார்டின்ஒரு பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது.

இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில்திமுகவினர் வெற்றி பெற்றும் அவற்றை அறிவிக்க பல மணி நேரம்தாமதம் செய்வதாக கூறி, சேலம் திமுக எம்.பி. பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு வந்திருந்த தேர்தல் பணியாளர்களுக்கு வைத்திருந்த உணவை, வேட்பாளர்களின் முகவர்கள் சாப்பிட்டுவிட்டனர். இதனால், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடாமல், தேர்தல் பணியாளர்கள் பிரச்சினையில் ஈடுபட்டதால், வாக்கு எண்ணிக்கையில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

வேப்பனபள்ளி ஒன்றியத்தில், சிகரமானபள்ளி கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், வாக்குப் பெட்டிகளை முகவர்கள் முன்னிலையில் திறக்கவில்லை என பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அங்கு மாலை வரை வாக்குகள் எண்ணப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in