

மதுரை உட்பட 6 தென் மாவட்டங்களில் தேனியைத் தவிர மற்ற மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 214 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 212 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 73 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக 32, திமுக 32, காங்கிரஸ் 1, பாஜக 1, தேமுதிக 1, சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கள்ளிக்குடி, திருமங்கலத்தில் அதிமுகவும், சேடப்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேற்கு, மேலூரில் திமுகவும், மற்ற 6 ஒன்றியங்களில் இழுபறி நிலையும் உள்ளது. மாவட்ட வார்டுகளில் திமுக 15, அதிமுக 8-ல் முன்னிலையில் உள்ளது.
திண்டுக்கல்லில் 23 மாவட்ட வார்டுகளில் 2-ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற வார்டுகளில் இழுபறி நிலை உள்ளது. 232 ஒன்றிய வார்டுகளில் 32-ல் திமுகவும், 18-ல் அதிமுக.வும் வெற்றி பெற்றுள்ளன. 14 ஒன்றியங்களில் கொடைக்கானல், வத்தலகுண்டு, திண்டுக்கல், சாணார்பட்டியில் திமுகவும், நத்தம், வடமதுரையில் அதிமுகவும் அதிக இடங்களைப் பெற்றுள்ளது. இதர ஒன்றியங்களில் இழுபறி நிலை காணப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசிக்கும் வார்டில் திமுக வெற்றி பெற்றது. 20 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 200 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 16 மாவட்ட வார்டுகளில் திமுக 6,அதிமுக 6-ல் வெற்றி பெற்றுள்ளன. 2-ல் இழுபறி நிலை. 160 ஒன்றிய வார்டுகளில் திமுக 35, அதிமுக 15, அமமுக 7, காங். 4, தேமுதிக 3-ல் வெற்றி பெற்றுள்ளன. இளையாங்குடி, திருப்பத்தூர் ஒன்றியங்களை திமுக கைப்பற்றும் நிலை உள்ளது.
தேனி மாவட்டத்தில் 10 மாவட்டஊராட்சி வார்டுகளில் 7-ல் அதிமுக, 3-ல் திமுக முன்னிலையில் உள்ளது. 98 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 17-ல் திமுக, 15-ல் அதிமுக, 2-ல் அமமுக வெற்றி பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 3-ல் திமுக, 1-ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 170 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் திமுக 17, அதிமுக 9, மற்றவர்கள் 7-ல் வெற்றி பெற்றுள்ளனர்.