Published : 03 Jan 2020 07:07 AM
Last Updated : 03 Jan 2020 07:07 AM

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: அதிமுக, திமுக தலைவர்கள் ஆலோசனை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு அதிமுக, திமுக தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் ஆலோசனை யில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காலை முதலே அதிமுக, திமுக இரு கட்சிகளும் சமமான எண்ணிக்கையில் இடங் களைப் பெற்று வந்தன.

பல இடங்களில் திமுக வேட் பாளரின் வெற்றியை அறிவிப்பதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமியை நேரில் சந் தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் புகார் அளித்தார். உயர் நீதி மன்றத்திலும் திமுக முறையிட்டது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளில் அதிமுக கூட்டணி 171, திமுக கூட்டணி 163, அமமுக 1 வார்டுகளிலும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் திமுக கூட்டணி 910, அதிமுக கூட்டணி 784, அமமுக 29, இதர கட்சிகள் 113 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தன.

இந்தச் சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதேபோல சென்னை தேனாம் பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறி வாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரை முருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஆலோ சனை நடத்தினர். மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கள நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். திமுக மாவட்டச் செயலாளர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள், முடிவுகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x