

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
டெல்லியிலிருந்து சென்னை வரும் அவர், இன்று காலை 6 மணிக்கு கார் மூலம் சிதம்பரம் செல்கிறார். அங்கு நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அங்கிருந்து புதுச்சேரி செல்லும் அவர், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல இருப்பதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பாஜக அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சிதம்பரம் செல்கின்றனர்.