

ராஜபாளையத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த திமுக எம்.எல்.ஏ.,எம்.பியை கண்டித்து அதிமுகவினர் கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குமார் நுழைந்ததாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர்,
பின்னர் அவர்களை வெளியேற்றச் சொல்லி அதிமுகவினர் கோஷம் எழுப்பியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 27-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த மையத்தில் காலையில் 11.30 மணியளவில் மிகவும் கால தாமதமாகவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதுவரை முன்னிலை நிலவரம் வெற்றி பெற்றவர்கள் நிலவரம் அறிவிக்கப்படவில்லை.
ஆகையால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திமுக தனுஷ் குமார் உள்ளே நுழைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.