ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திருமாவளவனின் தம்பி மனைவி வெற்றி

செல்வி
செல்வி
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைககள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் தம்பி செங்குட்டுவனின் மனைவி செல்வி வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை மற்றும் திருமானூர் ஒன்றியத்துக்கு டிச.27-ம் தேதியும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஒன்றியத்துக்கு டிச.30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியம், சன்னாசிநல்லூர் வார்டு எண்-1 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் தம்பி செங்குட்டுவனின் மனைவி செல்வி, குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை இன்று (ஜன.2) காலையில் தொடங்கிய நிலையில், முதல் சுற்றிலிருந்தே செல்வி முன்னிலை வகித்து வந்த நிலையில், 2,446 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அங்கு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 1,362 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 1,084 வாக்குகளே பெற்றிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in