

சிவகங்கை மாவட்டத்தில் பதிவான 374 தபால் வாக்குகளில் 372 வாக்குகள் செல்லாமல் போனதால் வாக்குகளை மீண்டும் எண்ண மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
தபால் வாக்குகளுடன் பணி ஆணை மற்றும் உறுதிமொழி படிவம் சேர்த்து வாக்குப்பெட்டிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்படும்.
சிவகங்கையில் 2 தபால் வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணியாணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உறுதிமொழி படிவம் மட்டும் இருந்தால் வாக்கை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி ஆட்சியர் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தபால் வாக்களித்த பலரும் தங்களுக்கு பணியாணை தராமல் இழுத்தடிக்கப்பட்டதாலேயே அதை வாக்குச்சீட்டுடன் சேர்க்க இயலவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர்.