Published : 02 Jan 2020 12:46 PM
Last Updated : 02 Jan 2020 12:46 PM

மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி: வெற்றி வேட்பாளர்கள் விவரம்

போடுவாா்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி (இடது); ப.மூப்பன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மகாராஐன் (வலது)

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெற்றி நிலவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

முதல் வெற்றி கண்ட பெண் வேட்பாளர்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சக்கரப்ப நாயக்கனூரைச் சேர்ந்த ஜென்சிராணி என்பவர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த ஊராட்சியில் 1723 வாக்குகள் பதிவாகியுள்ளன. வெற்றி பெற்ற ஜன்சிராணி 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

* மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் போடுவாா்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் செல்வராணி வெற்றி பெற்றார். ப.மூப்பன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவராக மகாராஐன் வெற்றி பெற்றார்.

* விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எரிச்சநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முத்துப்பாண்டி என்பவர் 1128 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

* ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் முசிறியா பேகம் வெற்றி.

* தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியம் அகமலை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் லதா வெற்றி பெற்றார். தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியம் கொட்டகுடி கிராம ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

* சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 1-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் பஞ்வரணம் 1579 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ராதா தோல்வியடைந்தார். இதேபோல், சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

* வார்டு கவுன்சிலர் ஆன அமமுக வேபாளர்: சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் அமமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். 903 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

* திமுக வேட்பாளரின் வெற்றி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் பால சிங் 45 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

* சுயேட்சையாக வெற்றி பெற்ற அதிமுக பிரமுகர்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் 1-வது ஒன்றிய கவுன்சில் வார்டுக்கு போட்டியிட்ட அதிமுக அதிருப்தி வேட்பாளர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x