இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு இன்று 2-வது கட்ட கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு இன்று 2-வது கட்ட கலந்தாய்வு
Updated on
1 min read

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான 2-வது கட்ட கலந் தாய்வு அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ் வர முருகன் கூறியிருப்பதாவது:

2015-16-ம் கல்வி ஆண்டுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக் கான இணையவழி கலந்தாய் வில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது கட்ட கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வுக்கு விண் ணப்பித்த தகுதியுள்ள மாணவர் களும், முதல் கட்ட கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்டு கலந்து கொள்ளாதவர்களும் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் 2-வது கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். விண்ணப்பம் ஒப்படைத்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தவறாமல் கலந்தாய்வில் பங் கேற்க வேண்டும். இந்த கலந் தாய்வுக்கென தனியே அழைப்புக் கடிதம் ஏதும் அனுப்பப்பட வில்லை.

கலந்தாய்வுக்கு வரும் மாண வர்கள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்று, இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள் போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ் (அனைத்தும் அசல் சான்றுகள்) ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். மேலும், கலந்தாய்வின்போது “The Director, SCERT, Chennai-6” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க ரூ.3,500-க்கான டிமாண்ட் டிராப்ட் டையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in