Published : 02 Jan 2020 09:38 AM
Last Updated : 02 Jan 2020 09:38 AM

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தாமதம்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

* நாகையில் வாக்குப் பெட்டிகளில் முகவர்கள் கையெழுத்து இல்லாததால் அதிர்ச்சி ஏற்பட்டது. வாக்குப்பெட்டிகளை திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

* பழனியில் முகவர்கள் வராததால் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை முன்பு அதிகாரிகள் காத்திருந்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

* திண்டுக்கல்லில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் திமுகவினர் முறையிட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

* அலுவலர்களை பணி அமர்த்துவதில் குளறுபடி ஏற்பட்டதால், பெரியகுளம் அருகே உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படவில்லை.

* சிவகங்கை அருகே வாக்கு எண்ணும் பணிக்கு வந்த ஊழியர்களுக்கு சாப்பாடு வசதி செய்யாததால், வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

* மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சிகளுக்கு நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முறையாக அறிவிப்பு பலகை இல்லாததால் எந்த அறைக்குச் செல்வதென தெரியாமல் வேட்பாளர்கள், முகவர்கள் கடும் குழப்பம் அடைந்தனர். இதனால் வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

* விருதுநகர் விஎச்என்எஸ்என் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளை நியமிப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

* திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையைத் திறக்க முடியாத‌தால் வாக்கு எண்ணிக்கையில் தாம‌தம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x