Published : 25 Aug 2015 11:42 AM
Last Updated : 25 Aug 2015 11:42 AM

தங்கம் விலை சற்று குறைந்தது

கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2570-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.20560-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.27490-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.38.15-க்கு விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.35660-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x