

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக் கப்பட்ட பணத்தை முருகனி டமிருந்து சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், ஏட்டு பெற்றனரா என விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி சமயபுரம் நெ.1 டோல் கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிச்சாண்டார்கோவில் கிளை உள்ளது. கடந்த ஜன.26, 27-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் வங்கியின் சுவரை துளையிட்டு லாக்கர்களை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஜன.28-ம் தேதியன்று போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வழியில் சிதறிக் கிடந்த 40 பவுன் நகைகள், ரூ.1.74 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வங்கியிலிருந்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போனதாக கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், 9 மாதங்க ளுக்குப் பிறகு தஞ்சாவூர் மாவட் டம் புதுக்குடி அருகேயுள்ள காமாட்சிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் ராதா கிருஷ்ணன்(28) என்பவரை வத்தலகுண்டு அருகே கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பிரபல கொள்ளையன் முருகன், அவரது சகோதரி மகன் சுரேஷ், தனது உறவினரான வாடிப்பட்டி அருகேயுள்ள தெத்தூரைச் சேர்ந்த கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் இருந்த சுரேஷை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பெங்களூரு சிறையிலுள்ள முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை குறித்து முருகனிடம் தனிப்படை போலீஸார் விசாரித்தபோது, ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பணத்தின் பெரும் பகுதியை சென்னையிலுள்ள ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோரிடம் அளித்துள்ளதாக முருகன் கூறினார் என தகவல்கள் வெளியாகின. இதை உறுதி செய்யாமல் காவல் துறையினர் மறுத்து வந்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய இன்ஸ் பெக்டர், ஏட்டு ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகின்றன.
இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக்கிடம் கேட்டபோது, “பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை தொடர்பாக முருகனிடம் இன்னும் விசாரிக்கவே இல்லை. அவரை காவலில் எடுத்து திருச்சிக்கு அழைத்து வர முயற்சி மேற்கொண்டுள்ளோம். அவரிடம் விசாரிக்கும்போதுதான் வங்கியில் கொள்ளையடித்த பணம், நகைகளை யார், யாரிடம் கொடுத்துள்ளார் என்ற விவரம் தெரியவரும். அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்வோம்.
இன்ஸ்பெக்டர், ஏட்டு குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. விசாரணைக்கு வரவ ழைப்பதற்கான அழைப்பானை எதுவும் அவர்களுக்கு அனுப்பப் படவில்லை. காவலில் எடுத்து விசாரிக்கும்போது முருகன் கூறுவதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.