Published : 02 Aug 2015 12:45 PM
Last Updated : 02 Aug 2015 12:45 PM

அரசாணை வெளியிடாததால் இலவச மரக்கன்றுகள் விநியோகம் பாதிப்பு: வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தமிழக அரசு அரசாணை வெளியிடாததால் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் முடங்கியுள்ளது.

தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம், பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வனத்துறை அலுவலகங்களில் இலவசமாக மரக்கன்றுகள் பெற்று பல்வேறு பகுதிகளில் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், 2014-15ம் ஆண்டுக்கான இலவச மரக்கன்று கள் வழங்குவதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் வழக்கம்போல மரக் கன்றுகள் பெறுவதற்காக வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஏமாற்றுத் துடன் திரும்பி செல்கின்றனர். அதனால், உடனடியாக இலவச மரக்கன்றுகள் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் கள் கூறும்போது, ‘வீட்டில் மரம் வளர்ப்பதற்கும் மற்றும் தன்னார்வமாக மரம் வளர்ப்ப வர்கள், தலைவர்களின் நினைவு நாளில் பள்ளி மற்றும் கல்லூரி களில் மரக்கன்றுகள் நடுவதற்காக, மாவட்ட வனத்துறை அலுவலகங் களில், மரக்கன்றுகள் பெறுவதற் கான விளக்கக் கடிதம் அளித் தால் இலவச மரக்கன்றுகள் வழங் கப்படும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட வனத் துறை அலுவலகங்களில் இலவச மரக்கன்றுகள் பெற முடியவில்லை.

வனத்துறை வளர்த்து வைத் துள்ள மரக்கன்றுகள் அரசின் உத்தரவுக்காக காத்திருக்கின்றன. அனைத்து மாவட்டங்களில் இதே நிலை காணப்படுவதால், மரக்கன்றுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ள வேண்டும் என்று அவர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, வனத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வழங்குவதற்கான அரசாணை, ஆண்டுதோறும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வெளியிடப்படும். ஆனால், 2014-15ம் ஆண்டுக்கான அரசானை இன்னும் வெளியாகவில்லை. மேலும், நிதி ஒதுக்கீடும் இல்லாததால், வனத்துறை அலுவலகங்களில் குறைந்த அளவிலான மரக்கன்று கள் உற்பத்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.

எனினும், அரசாணை வந்தால் மட்டுமே அதிகளவிலான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x