Last Updated : 31 Dec, 2019 07:19 PM

 

Published : 31 Dec 2019 07:19 PM
Last Updated : 31 Dec 2019 07:19 PM

மரித்திராத மனிதநேயம்: ஆதரவற்ற இந்துப் பெண்ணை நல்லடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் 

தஞ்சாவூர் 

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக யாசகம் பெற்று வந்தவர் தேவி (54). ஆதரவற்ற நிலையில் இருந்த இவர் அதிராம்பட்டினத்தில் உள்ள தெருக்களிலும், பேருந்து நிலையப் பகுதியிலும் சாலையோரமாக உண்டு உறங்கி வந்தார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி இரவு அதிராம்பட்டினத்தில் தேவி இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், நெய்னா முகமது, ஆரிப், ஹசன் உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தாமாக முன்வந்து காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வண்டிப்பேட்டை மயானத்துக்கு தேவியின் உடலை எடுத்துச் சென்று 30-ம் தேதி காலை நல்லடக்கம் செய்தனர். இஸ்லாமிய இளைஞர்களின் தன்னலமற்ற செயல், மனிதநேயம் மற்றும் மத நல்லிணத்துக்குச் சான்றாக பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x