Published : 30 Dec 2019 01:46 PM
Last Updated : 30 Dec 2019 01:46 PM

காளைகளுக்கு ஆன்லைன் பதிவை ரத்து செய்க: ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினர் மதுரை ஆட்சியரிடம் மனு

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்யவும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யக்கோரியும் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு காளைகளை நடப்பாண்டு முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கட்டயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது காளைகளின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது.

இதனிடையே ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறைகளை ரத்து செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் மனு அளிக்க வந்தனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி ஆட்சியர் வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர்.

பின்னர் மனுக்களை அளிக்க ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் மாநில தலைவர் மணிகண்டபிரபு, மாநில செயலாளர் பா.ரஞ்சித் உள்பட 10க்கும் மேற்பட்டோர், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஜல்லிக்கட்டு காளைகளை ஒடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழர்களால் அன்பாக வளர்க்கப்படும் காளைகளுக்கு எதிரான சட்டம்.

இதன் மூலம் ஜல்லிக்கட்டு காளைகளை அரசே வதை செய்வது முறையல்ல. அது மட்டுமின்றி விவசாய தொழில் செய்து கிராமங்களில் வசிக்கும் காளை உரிமையாளர்கள், காளை ஆன்லைன் பதிவு என்பது தேவையற்றது என எண்ணுகின்றனர்.

இந்த சட்டம் சரி எனில், ஏன் இது பற்றி முறையான அறிவிப்பை தமிழக அரசு ஏன் செய்யவில்லை. எனவே, ஜல்லிக்கட்டு முறையை ரத்து செய்யவும், சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும், மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சட்ட திருத்தம் செய்ய வழிவகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x