Published : 30 Dec 2019 01:47 PM
Last Updated : 30 Dec 2019 01:47 PM

புத்தாண்டில் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரைச் சுற்றிப் பார்க்கலாம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் சென்னை முழுவதும் சுற்றிப் பார்க்க ரூ.10 கட்டணத்தில் வாகனங்களை இயக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ttdc) முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாலை 6 மணி வரை எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். இறங்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் (ttdc) செய்திக்குறிப்பு:

“வரும் ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவைப் பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரச் சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் சிறப்புச் சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

எங்கெங்கு போகலாம்?

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.

காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செல்லதக்கதாகும்.

சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.

மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 04425333333/ 25333444/ 25333857/ 25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www.tamilnadutourism.org. தொடர்பு கொள்ளலாம்”.

இவ்வாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x