

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவமனை டீன் டாக்டர் பா.சரவணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
பல் மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரம் முதல் 2 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். இனிமேல் இவர்கள் தென்தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரியிலேயே அதிநவீன சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.