Published : 28 Dec 2019 12:55 PM
Last Updated : 28 Dec 2019 12:55 PM

தனி மனித ஆரோக்கியமே தேசத்தின் ஆரோக்கியம்: 'வலிமை இந்தியா' பயிற்சி முகாமில் இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன் பேச்சு

தனி மனித ஆரோக்கியமே தேசத்தின் ஆரோக்கியம் என வலிமை இந்தியா பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்த இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ரோட்டரி சங்கம் சார்பில் வலிமை இந்தியா உடற் பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

இதில், இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன் பங்கேற்று அனைத்து வயதினரும் எளிதாக செய்யக்கூடிய மூச்சுப் பயிற்சியையும், உடம் சில உடற் பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார்.

மேலும் விளையாட்டு வீரர்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கியப் பயிற்சிகள் குறித்தான ஆலோசனைகளை வழங்கினார்.

வலிமை இந்தியா உடற் பயிற்சி முகாம் குறித்து பாஸ்கரன் கூறும்போது, "இப்பயிற்சி முகாமில் 15 விதமான பயிற்சி முறைகள் சொல்லித் தரப்பட்டுள்ளன.

இவற்றை அன்றாடம் ஒருவர் 45 நிமிடங்கள் செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் எனவே 2020-ல் வலிமையான இந்தியா உருவாக்க வேண்டுமென்றால் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனின் ஆரோக்கியமே தேசத்தின் ஆரோக்கியம்" என்று கூறினார்.

இந்த பயிற்சி முகாமில் ரோட்டரி சங்கச் செயலாளர் மாதவன் பொருளாளர் காசி மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் நடைபயிற்சியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x