Published : 28 Dec 2019 07:32 AM
Last Updated : 28 Dec 2019 07:32 AM

27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அமைதியாக நடந்து முடிந்த முதல்கட்ட தேர்தல்; திருவள்ளூரில் வாக்குப் பெட்டி எரிப்பு: புதுக்கோட்டையில் பெட்டியுடன் ஓட்டம்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு, அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. திருவள்ளூர் மாவட்டத் தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப் பெட்டிக்கு தீ வைக்கப் பட்டது. புதுக்கோட்டையில் வாக்குப் பெட்டிகளை சிலர் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சென்னை மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங் களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங் களாக தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல்கட்டமாக 156 ஒன்றியங்களி லும் 2-ம் கட்டமாக 158 ஒன்றியங் களிலும் சேர்த்து மொத்தம் 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் நேற்று தேர்தல் நடந்தது. 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,546 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 45,336 பதவிகளில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர்த்து இதர பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

இதற்காக அமைக்கப்பட்டிருந்த 24,680 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர், சின்னம் இடம்பெறவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

இத்தேர்தலில் 4 பதவிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடந்ததால் 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப் பட்டன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

பதற்றமானவை என அடை யாளம் காணப்பட்ட 1,709 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, இணையதளம் மூலமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவாறு வாக்குப்பதிவு கண் காணிக்கப்பட்டது. கோயம்பேட்டில் நடந்த மாநில அளவிலான கண் காணிப்புப் பணிகளை மாநில தேர் தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, செயலாளர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

காலை 10 மணி வரை 10.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதன்பிறகு வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்த நிலை யில், 11 மணி நிலவரப்படி 24 சதவீதமாகவும், 1 மணி நிலவரப்படி 42.47 சதவீதமாகவும், 3 மணி நிலவரப்படி 57.50 சதவீதமாகவும் அதிகரித்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

முதல்வர் வாக்களித்தார்

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல் புரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 114 வாக்குச் சாவடிகளிலும் முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டன. ஒவ்வொரு வாக்காளரும் 4 இயந்திரங்களில் தலா ஒரு வாக்கை பதிவு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத் தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சி யில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 84-ம் எண் வாக்குச் சாவடி இடம்பெற்றிருந்தது. அங்கு வாக்குப்பதிவு நடந்துகொண்டி ருந்தபோது, திடீரென 50-க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து, அங்கிருந்த ஆவணங்கள், இருக் கைகளை சூறையாடினர். பின்னர் வாக்குப் பெட்டியை வெளியில் தூக்கிவந்து, பதிவான வாக்கு களை தீ வைத்து எரித்தனர். இச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.

அதேபோல, திருவள்ளூர் மாவட் டம், ஈக்காடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஏற்கெனவே குறிப்பிட்ட சின்னத்தில் வாக்களிக் கப்பட்ட வாக்குச்சீட்டுகள் வழங்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, அது தொடர்பாக தேர்தல் அலுவலர் கள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

வாக்குப் பெட்டியுடன் ஓட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை ஊராட்சி ஒன்றியம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குப்பதிவு முடியும் தருவாயில், அடையாள அட்டை இன்றி வாக்களிக்க வந்த வரை, வாக்குச்சாவடி அலுவலர் களும் முகவர்களும் தடுத்தனர். அப்போது சிலர், பின் வாசல் வழி யாக வந்து, வாக்குப் பெட்டிகளை தூக்கிச் சென்றனர். சிறிது நேரத் தில் வாக்குப் பெட்டிகளை போலீஸார் மீட்டனர்.

இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் சீல் வைக்கப் பட்டு வாக்கு எண்ணும் மையங் களுக்கு பலத்த பாதுகாப் புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப் பெட்டிகள் வைக்கப் பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப் பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.

மீதம் உள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ம் கட்டமாக வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், 27 மாவட்டங்களில் 315 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஜன. 2-ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x