சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்றக் கோரி அம்பத்தூரில் தமாகா ஆர்ப்பாட்டம்

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்றக் கோரி அம்பத்தூரில் தமாகா ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

கிடப்பில் போடப்பட்டுள்ள, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையை 6 வழியாக விரிவு படுத்தும் பணியை விரைந்து தொடங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் அம்பத்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட பிரிவு சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அம் பத்தூர் உழவர் சந்தை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘சென்னை-திருப்பதி நெடுஞ் சாலையை 6 வழியாக விரிவு படுத் தும் பணி கிடப்பில் போடப்பட் டுள்ளது. இந்த பணியை விரைந்து தொடங்க வேண்டும், அம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தை விரிவு படுத்தவேண்டும், கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் நத்தை வேகத்தில் நடந்துவரும் சுரங்கப் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும், அம்பத்தூர் தொழிற் பேட்டைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை சூட்டவேண் டும், அம்பத்தூரில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றை அரசே ஏற்று நடத்தவேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தவும் ஆர்ப் பாட்டத்தின்போது தமாகாவினர் வலியுறுத்தினர். இதில், கட்சியின் மாநில துணை தலைவர்கள் வேலூர் ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in