Published : 27 Dec 2019 02:15 PM
Last Updated : 27 Dec 2019 02:15 PM

உள்ளாட்சித் தேர்தல்: வரிசையில் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் செங்கோட்டையன்

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் காத்திருந்து அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார்.

வாக்களிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என்றார். விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x